ADDED : செப் 23, 2022 09:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏழு மலைகளை உள்ளடக்கிய பகுதி திருப்பதி. இங்கு ஆதிசேஷனே மலை வடிவில் சுருண்டு கிடப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அது மட்டும் இல்லை. இந்த மலையே சாளக்கிராமக் கல்லாக உள்ளது. சாளக்கிராமம் என்பது கருமை நிறத்தில் உள்ள சக்தி வாய்ந்த கல். அந்த கல்லை வெட்டிப் பார்த்தால் அதன் உள்ளே சக்கர அமைப்பு இருப்பதை காணலாம். அதைப்போல இந்த மலையின் உட்புறத்தில் சக்கர அமைப்பு உள்ளது. இப்படி புண்ணிய ஸ்தலமாக திருப்பதி இருப்பதால், ராமானுஜர் மலைமேல் தன் பாதங்களை பதித்துச் செல்ல விரும்பவில்லை. மாறாக முழங்கால்களை பதித்து ஊர்ந்து சென்றே வெங்கடாஜலபதியை தரிசித்துள்ளார்.

