ADDED : ஆக 10, 2014 05:58 PM

அடடா...எத்தனையோ கோயிலுக்குப் போயாச்சு! கல்யாணம் நடந்த பாடா தெரியலை! மாப்பிள்ளை நல்ல பையனா தெரிஞ்சா வேலை சுமாரா இருக்குது! எல்லாமே சரியா அமைஞ்சா அவங்க கேட்கிற சீர்வரிசையைச் செய்யுறதிலே பணமுடை ஏற்படுது! இப்படி எத்தனையோ காரணங்களால், திருமணத்தடை ஏற்படுகிறதா! மணப்பெண்களே! இதுபோன்ற தடைகளைப் போக்குவற்கென்றே 'மணமாலை அணியும் வழிபாடு' என்ற நிகழ்ச்சி, திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி(சின்னம்பேடு) பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆக.10ல் நடக்க உள்ளது.
அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவின் ஐந்தாம் ஆண்டு விழாவையொட்டி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 7மணிக்கு அபிஷேகத்துடன் விழா தொடங்கும். இதையடுத்து 8 மணிக்கு வள்ளி மணவாளப் பெருமாளுக்கு திருமணம் நடக்கும். பின்பு, சுவாமி கோயிலுக்குள் பவனி வருவார்.
திருமணமாகாத ஆண், பெண்கள் மாலை ஒன்றைக் கொண்டு வந்து சுவாமிக்கு அணிவிக்க வேண்டும். அதையே பிரசாதமாகப் பெற்று, சுவாமி பவனி வரும் போது, அவர் பின்னால் வலம் வர வேண்டும். இவ்வாறு செய்தால் எத்தகைய திருமணத்தடையும் நீங்கும் என்பது ஐதீகம். அன்னதானமும் உண்டு.
சிறுவாபுரியாரை வணங்கினால் சீக்கிரமே திருமணம் நடக்கும். வாருங்களேன்! நீங்களும் சிறுவாபுரிக்கு.
இருப்பிடம்: கோயம்பேட்டில் இருந்து 35 கி.மீ.,
போன்: 97909 57593, 044-2471 2173