தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/திருமண ஆபரணங்கள்

திருமண ஆபரணங்கள்

திருமண ஆபரணங்கள்


ADDED : ஏப் 18, 2016 01:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2016 01:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகத்திற்கே படியளப்பவள் அன்னை மீனாட்சி. அவள் நினைத்தால் தங்க மழையே பெய்யும். உள்ளத்தாலும் அவள் தங்கம். அந்த தங்கத்தின் மீது கொண்ட பக்தியின் காரணமாக மன்னர்களும், பக்தர்களும் அவளுக்கு பல்வேறு நகைகளை அணிவித்துப் பார்த்தனர். அதிலும் ஒரு பெண்ணுக்கு திருமணம் என்றால் விசேஷமான நகைகள் அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா என்ன! அதனால் மீனாட்சி கல்யாணத்தன்று அம்பாளுக்கும், சுவாமிக்கும் பிரத்யேகமான நகைகளை அணிவர்.

சுவாமியின் சிரசில் நீலக்கற்கள் பதித்த கிரீடம், தங்க பூணூல், காதில் மாணிக்கக்கல் பதித்த தோடு, கைகள் முழுக்க ரத்தின அலங்காரம், ஒரு கையில் தங்க பூச்செண்டு, மார்பில் தங்க கவசம், முதுகு மற்றும் பாதத்தில் தங்கத்தாழ்வடம், கழுத்தில் நீலக்கல் பதித்த நள பதக்கம் ஆகியவை அணிவிக்கப்படும்.

மீனாட்சியின் கழுத்து முதல் பாதம் வரையில் தங்க அங்கி, சிரசில் தங்க கிரீடம், தங்க கிளி அல்லது தங்க செங்கழுநீர் மலர், வைரத்தாலி (மீனாட்சி நித்ய சுமங்கலி என்பதால் திருமணத்துக்கு முன்பாகவே இந்த தாலி அணிவிக்கப்படும்) ஆகிய ஆபரணங்கள்

அணிந்திருப்பாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us