ADDED : ஏப் 28, 2017 10:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பதி ஏழுமலையான் திருமணத்திற்கே கடன் கொடுத்தவர் என்பதால், 'அவன் என்ன குபேரனா அள்ளிக் கொடுப்பதற்கு?' என்று சொல்வதுண்டு. சிவந்த மேனி, குள்ள வடிவம், பெரிய வயிறு, சிரித்த முகம் என காட்சி தரும் இவர், பல ஆண்டுகள் தவமிருந்து சிவனின் நண்பரானார். இவரது கிரீடத்தில் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். பால், தேன், தயிர், நெய், கற்கண்டு, மாவில் செய்த இனிப்பு வகை படைத்து, ரோஜா மலரால் அர்ச்சித்தால் மனம் குளிர்ந்து அருள்வார்.

