ADDED : ஜூலை 15, 2012 10:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவுர்ணமியன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நட்சத்திரமே மாதங்களின் பெயராக அமைந்திருக்கும். சித்திரையில் சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசியில் விசாகத்திலும், ஆனியில் அனுஷத்திலும் பவுர்ணமி அமையும்.ஆடியில் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும். ஆஷாடத்தில் இரண்டு உண்டு. முதலில் வருவது பூர்வ ஆஷாடம்,பின்னர் வருவது உத்தர ஆஷாடம். பூர்வ ஆஷாடம் என்பது 'பூராடம்' என்றும், உத்தர ஆஷாடம் 'உத்திராடம்' என்றும் சொல்லப்படுகிறது. உத்திர ஆஷாடத்தில் பவுர்ணமி வரும் ஆடி மாதத்தை வடமொழியில் 'ஆஷாடீ' எனப்பட்டது. அதுவே தமிழில் 'ஆடி' என்று மருவி விட்டதாகச் சொல்வர்.

