ADDED : அக் 27, 2017 09:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாயின் அன்பை உணர்த்துவதில் உணவுக்கு முக்கிய பங்குண்டு. உணவும், மன உணர்வும் நெருங்கிய தொடர்புள்ளவை. உணவே நம் மன உணர்வாக மாறுகிறது. சிலர் மற்றவர் கொடுத்ததை சாப்பிடும் போது 'இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு' என்று சொல்லி மகிழ்வதுண்டு. 'அன்னையோடு அறுசுவை உண்டிபோம்' என்று அம்மாவின் மகத்துவத்தை சொல்கிறார் பட்டினத்தார்.
இதனடிப்படையில் அம்மையப்பராக வீற்றிருந்து உலகைக் காக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இதை நடத்துவர். 'அன்னம் பரப்பிரம்ம சொரூபம்' என்றும் சொல்வர். உணவை கடவுளாக கருதுவதால், அதை வீணாக்க கூடாது.