ADDED : மார் 03, 2017 01:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீடு கட்ட, வாங்க பூமி பூஜை செய்ய, பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் என வீடு சார்ந்த நிகழ்வுகள் எதையும் பங்குனியில் செய்வதில்லை. வாஸ்து புருஷன் என்னும் பூதம் பூமிக்குள் உறங்கிக் கொண்டிருக்கும். இது எழும் காலமே வாஸ்து நேரம் எனப்படும். இது 36 நிமிடம் மட்டுமே எழும். அந்த நேரத்தில் இவரை சாந்தி செய்யும் விதத்தில் பூமி பூஜை நடத்தினால் கட்டடப்பணிகள் விரைவில் முடியும். பங்குனியில் இந்த பூதத்தின் உறக்கம் கலையாது. இந்த நேரத்தில் நாம் பூமியைத் தோண்டி தொந்தரவு செய்தால், இந்த பூதம் நம்மை வேலை செய்ய விடாது. எனவே இந்த மாதத்தில் பூமி பூஜை செய்வதில்லை.

