ADDED : செப் 08, 2017 09:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குதிரை வடிவில் உள்ள லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டால் கல்வியறிவு, செல்வம், தானியம், தொழில் விருத்தி, நோயின்மை, நீண்ட ஆயுள் உண்டாகும்.
வாக்கு வன்மைக்கு அதிபதியான தட்சிணாமூர்த்தியும், வித்தைக்கு அதிபதியான சரஸ்வதியும், ஹயக்ரீவ மூர்த்தியின் அருள் பெற்றவர்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பெருமாள் கோயிலிலுள்ள தேசிகன் சன்னதி லட்சுமி ஹயக்ரீவர் விசேஷமானவர். இவரை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ரங்க ராமானுஜ மஹா தேசிக சுவாமிகள் பிரதிஷ்டை செய்தார். மாணவர்கள் 'ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரம்' என்ற நூலில் உள்ள 32 ஸ்லோகங்களை பாராயணம் செய்யலாம்.
'ஞானானந்த மயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக் கிருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மகே'
என்ற ஸ்லோகத்தை தினமும் சொன்னால் கல்வியில் வளம் பெறலாம்.