ADDED : பிப் 01, 2021 07:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசுரர்கள் தங்களின் சக்தியால் சூரிய, சந்திரரை மறைத்து பூமியை இருளில் மூழ்கடித்தனர். அசுரர்களுக்கு முடிவு கட்ட பிரகதாரண முனிவர் புனித தலமான காசியில் யாகம் நடத்தினார். மனம் இரங்கிய சிவன் தன் சக்தியில் சிறுபங்கை யாகத்தில் சேர்க்க அது, பைரவர் என்னும் சக்தியாக வெளிப்பட்டது. முனிவரின் வேண்டுகோளை ஏற்ற பைரவர் அசுரர்களை அடக்கி சூரிய, சந்திரரை முன் போல பிரகாசிக்கச் செய்தார். அதன்பின் தெற்கு நோக்கி புறப்பட்ட பைரவர் சிவனின் ஆணைப்படி திருப்பத்துார் என்னும் தலத்தில் யோக நிலையில் அமர்ந்து அருள்புரிந்தார். கிரகதோஷம் அகல ராகு காலத்தில் வழிபடுவது சிறப்பு. மதுரை- தஞ்சாவூர் சாலையில் 63 கி.மீ., துாரத்தில் இத்தலம் உள்ளது.