ADDED : டிச 16, 2021 09:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலை ஐயப்பன் கோயில் நுழைவுவாசலில் 'தத்வமஸி' என எழுதப்பட்டிருக்கும். 'நீயே அதுவாக இருக்கிறாய்' என்பது இதன் பொருள்.
'அது' என்பது ஐயப்பனைக் குறிக்கும்.
''நீ உருவத்தால் மனிதனாய் இருக்கிறாய். உன் உடலைக் கொண்டு பல பாவங்கள் செய்கிறாய். என்னை நினைத்து விரதம் இருக்கும் போது மட்டும் உன் உடலையும், மனதையும் கட்டுக்குள் வைத்திருக்கிறாய். உன்னை மற்றவர்கள் 'சுவாமி' என அழைக்கிறார்கள். ஏன்...'ஐயப்பா' என்று கூட சிலர் அழைப்பதுண்டு. அப்போது நீ நானாகவே ஆகிறாய். தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறாய். இங்கிருந்து திரும்பிய பிறகும் மனக்கட்டுப்பாட்டை இழக்காதே. என்னைப் போலவே மாறி விடுவாய்'' என்று ஐயப்பன் பக்தர்களுக்கு சொல்வது போல உள்ளது இந்த வாக்கியம்.

