sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

தர்மம் நீதி நிலைக்கட்டும்

/

தர்மம் நீதி நிலைக்கட்டும்

தர்மம் நீதி நிலைக்கட்டும்

தர்மம் நீதி நிலைக்கட்டும்


ADDED : ஜூலை 31, 2012 11:07 AM

Google News

ADDED : ஜூலை 31, 2012 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*உலகைப் படைத்துக் காக்கின்ற மகாசக்தியே! நாங்கள் செய்யும் செயல் யாவும் வெற்றி பெற நல்லருள் தா.

* நிலம்,நீர், தீ,காற்று, ஆகாயம் ஆகிய ஐந்திலும் உள்ளிருந்து இயக்கும் பராசக்தியே! வேதம் போற்றும் வித்தகியே! மனிதகுலம் மேன்மை பெறச் செய்ய அருள்புரிவாயே.

* எதற்காகவும் மனம் வருந்தக்கூடாது. வருத்தத்தால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. நாம் வேண்டுமென்றே இந்த பூமியில் பிறக்கவும் இல்லை. அதுபோல் வாழ்வின் முடிவும் நம் வசத்தில் இல்லை. எனவே, பராசக்தியின் மலரடியை சரணடைந்து விடு.

* எந்தக் காலத்திலும் நன்னெறியைப் பின்பற்றும் உறுதியை எனக்குக் கொடு. 'ஓம் சக்தி' என்று ஜெபிப்போருக்கு வேண்டிய வரம் அனைத்தும் அருள் செய். இந்த மண்ணுயிர் எல்லாம் பசியும், நோயும் இல்லாத நல்வாழ்வு பெற வழிகாட்டு.

* எங்கும் நிறைந்தவளே! எந்நாளும் உன் பெருமைகளைப் போற்றி மகிழும் மனநிலையைக் கொடு. உலகெங்கும் தர்மம், நீதி, நியாயம் நிலைக்க அருள் செய்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us