ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

பாரதியார்

வெற்றிக்கு தேவையான குணம் எது

வெற்றிக்கு தேவையான குணம் எது
ADDED : மே 09, 2009 11:21 AM

* எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே தான் சுகமிருக்கிறது. வறுமை, நோய், துன்பம் போன்ற எல்லா பேய்களும் உழைப்பை கண்டால் ஓடி ஒளிந்து விடும்.
* மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும், உன்னையும், என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும், நானும் தெய்வம் என்று வேதங்கள் கூறுகின்றன. இவை தான் தெய்வம். இதைத் தவிர வேறு தெய்வம் உலகில் இல்லை.
* தன்னை மறந்து தெய்வத்தை நம்புங்கள். உண்மை யையே பேசி நியாயத்தையே எப்போதும் செய்ய தலைப்படுங்கள். எல்லா இன்பங்களும் உங்களைத் தேடி ஓடி வரும்.
* உண்மையான தெய்வபக்தி இருந்தால் மனோதைரியம் உண்டாகும். மனோதைரியம் இருந்தால் தான் உண்மையான தெய்வபக்தி உண்டாகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன.
* வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமா னால் அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த குணம் பொறுமை.