ADDED : ஜன 26, 2024 07:01 AM

'அரசியல்வாதிகளில் பலர் சுயநலமாக இருக்கிறார்களே... அவர்களை எப்படி அடையாளம் காண்பது' என இளைஞன் ஒருவன் பாதிரியாரிடம் கேட்டான். சுயநலவாதிகளின் இயல்புகளை அவர் பட்டியலிட்டார். * 'இந்த செயலில் ஈடுபட்டால் என்ன லாபம் கிடைக்கும் என்பதே சுயநலவாதிகளின் நோக்கமாக இருக்கும்.* சுயநலத்துடன் பிறருக்கு நன்மை செய்வர்.* தனக்கு சாதகமாக இருக்கும் செயல் பிறருக்கு பாதகமாக இருந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். * தனக்கு சாதகமாக இல்லாத நிலையில் பிறருக்கு நன்மை கிடைத்தால் அதை தடுத்து நிறுத்துவர். * அண்டை வீட்டார், சமுதாயம், நாட்டு மக்கள் மீது அக்கறை இருக்காது. * தன் வேலை முடிந்ததும் பிறரது நட்பு, தொடர்பை விலக்கிக் கொள்வர். * ஆபத்து, அவசர நிலையில் கூட பிறர் மீது இரக்கப்பட மாட்டார்கள். * இவர்களின் வாழ்வில் தியாகத்திற்கு இடமிருக்காது.