
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எல்லாம் நன்மைக்கே. எனவே அமைதியாக இருங்கள். * விதைப்பதற்கு ஏற்ற காலத்தில் விதைத்து விடுங்கள். பருவம் தவறினால் பயிர் பாழாகும். * இலவசமாக எதைக் கொடுத்தாலும் அதன் அருமை தெரியாது. * தேவனின் வசனம் சத்தியம். அது உம்மை பரிசுத்தப்படுத்தும். * உன்னை விட்டு நான் விலகுவதுமில்லை. கைவிடுவதுமில்லை. * அனைவரும் ஒளியை பெற வேண்டும் என்பதற்காகவே பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. * புத்திசாலியை விட சாமர்த்தியசாலியே சிறந்தவன்.* சுயநலம் சாகும் போது பொது நலம் பிறக்கும்.* ஆண்டவருக்காக எதையும் செய்வேன் என்பதை விட எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பேன் என்பது சிறந்தது.* இரக்கம், தாழ்மை, பொறுமை, உதவி, சாந்தம், புன்னகை, விட்டுக்கொடுத்தல், உண்மை, நேர்மை இவற்றை வெளிப்படுத்த முடியாதவர்கள் இருந்தும் பூஜ்ஜியமே.