
* கோபம், பொறாமையைக் கைவிட்டு நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* உடல் பலத்தை விட சட்டெனக் கோபப்படாதவரே மேலானவர்.
* உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். வீண் பிரச்னைகளில் சிக்க மாட்டீர்கள்.
* கோபப்படுவதற்கு நியாயமான காரணம் இருக்கலாம். ஆனால் அதை அடக்காவிட்டால் ஆபத்தில் முடியும்.
* எடுத்தோம் கவிழ்த்தோம் என கோபத்தில் பேசி விட்டு வருத்தப்படுவதால் என்ன பயன்?
* கோபம் உங்களை ஆக்கிரமிக்கும் முன்பே நீங்கள் அதை அடக்கப் பழகுங்கள்.
* கோபம் நமக்கு பலம் அல்ல... பலவீனமே. கோபத்தை கட்டுப்படுத்தாதவர் 'கோட்டை சுவர் இடிந்த நகரம் போன்றவர் என்கிறது நீதிமொழி.
* விவேகம் என்னும் நற்குணத்தால் கோபத்தை தணியுங்கள்.
* பிரச்னையை முதலில் முழுமையாக தெரிந்து கொண்டால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். அப்போது அறிவு வேலை செய்யும். அந்நிலையில் மனநலம் காக்கப்படும்.