
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனதை திடமாக வைத்துக் கொள்பவரே உலகத்தை ஆள முடியும்.
* புத்திசாலி காலம் முழுவதும், சாமர்த்தியசாலி குறிப்பிட நேரத்திலும் பணியாற்றுவர்.
* பேசும் முன் யோசி. பின்னர் இப்படி பேசி விட்டோமே என வருந்தாதே.
* ஒருமுறை மட்டுமல்ல... மூன்று முறை பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்.
* பிறருக்கு செய்யும் சிறுஉதவி உங்கள் தலைமுறையை காக்கும்.
* துன்பம் நேர்ந்தாலும் உற்சாகத்தை விட்டு விடாதீர்கள்.
* ஆண்டவருக்கு பயப்படுபவர் தவறு செய்யவும் பயப்படுவார்.
* சகோதரரை ஒருபோதும் திட்டாதீர்கள்.
* பிறருக்கு படுகுழி தோண்டுபவரை காலம் நிச்சயம் வீழ்த்தும்.
* வாக்குவாதம் வேண்டாம். கேட்பவரின் புத்தி தடுமாறும்.
* தீயவரிடம் நற்செயலை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம்.