
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கோபத்திலிருந்து நீங்கி உக்கிரத்தைக் கைவிட்டு விடு. பொல்லாங்கு செய்வதற்கு ஏதுவான எரிச்சல் உன் புத்திக்கு வேண்டாம்.
* தேவையுள்ளவன் என்றைக்குமே மறக்கப்படுவதில்லை. எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய் விடுவதில்லை.
* தீயமனம் படைத்தவர்களும் மதியை மயக்கி கெடுப்பவர்களும் மோசத்திற்கு மேல் மோசமாய் உருகி பிறரையும் ஏமாற்றித் தாங்களும் ஏமாந்து போகிறார்கள்.
* மனிதர்கள் உங்கள் நற்காரியங்களைக் காணும் பொருட்டு உங்கள் ஒளி அவர்கள் முன் பிரகாசிக்கட்டும். பரமண்டலத்திலுள்ள உங்கள் பிதாவை அவர்கள் போற்றட்டும்.
* எந்த உழைப்பிலும் ஊதியம் உண்டு. வெறும் வாய்ப்பேச்சில் ஒரு பலனும் இல்லை.
* சகோதரர்கள் ஒருமித்து ஒற்றுமையுடன் வசிப்பது எவ்வளவு நன்மையானது. எவ்வளவு மனோகரமானது என்பதைப் பாருங்கள்.
- பைபிள் பொன்மொழிகள்