
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். வாழ்வில் உழைப்பால் உயர்ந்திடுங்கள்.
* பிறர் உங்களைக் குற்றம் சொல்லும் விதத்தில் நடக்காமல் கடமையைக் கண்ணாக மதியுங்கள்.
* கற்ற நல்ல விஷயங்களை மறக்காமல் வாழ்வில் கடைபிடிப்பவனே அறிவாளி.
* செல்வமும், ஆயுளும் தாமரை இலை தண்ணீர் போல நம்மை விட்டு நிலையில்லாமல் ஓடும்.
* போதும் என்ற எண்ணம் இல்லாதவன் எதையோ இழந்தது போல அலைந்து கொண்டிருப்பான்.
* மனிதன் பிறருக்கும் பயன்படும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
- ஜெயேந்திரர்