/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
குழந்தையானந்த சுவாமி
/
யாரையும் துன்புறுத்தாதீர்கள்
/
யாரையும் துன்புறுத்தாதீர்கள்
ADDED : டிச 11, 2007 10:19 PM

திருப்தி அடையாதவன் ஒருவரையும் திருப்தி செய்ய மாட்டான். எவன் எப் பொழுதும் சந்தோஷத்துடனும், திருப் தியுடனும் இருக்கிறானோ, அவனே எல்லாரையும் சந்தோஷத்துடன் இருக் கச் செய்வான்.
நாக்கு பாவ காரியங்களைப் பேசுவதில் மிகவும் தயாராக உள்ளது. அதனால் அதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
சோம்பல் எல்லா விபரீதங்களுக்கும் மூலகாரணமாகிறது. அதனால் அதனை எப்பாடுபட்டாவது விட்டுவிட வேண்டும்.
உலகமாவது தர்ம, அதர்ம காரியங்களில் பரிட்சை ஸ்தலமாகும். அதனால் மிகுந்த கவனத்துடன் தர்ம, அதர்மங்களைப் பரிட்சித்துப் பார்த்து காரியங்களை செய்ய வேண்டும்.
எந்த தர்மத்திலும் அசிரத்தை வைக்கக்கூடாது. எல்லாமே தர்மத்தின் சாரங்கள். அதில் சத்யம் அவசியம் இருக்கிறது.
தரித்திரர்களுக்குத் தானம் செய்ய வேண்டும். பணக்காரர்களுக்கு தானம் செய்வது வீண்.
ஆத்ம ஞானம், நல்லவர்களுக்கு தானம் செய்தல், எப்பொழுதும் சந்தோஷத்தை உடையவராக இருத்தல் ஆகியவற்றை அடைவதால் மோட்சம் கிடைக்கிறது.
எவனொருவன் சாஸ்திரங்களைப் படித்து அதன் ரகசியங்களை அறிந்தும்கூட, அதைக் கடைப்பிடிக்காமல் இருக்கிறானோ அவன் பாவியைக் காட்டிலும் கீழானவன்.
எந்தக் காரியத்தை கடைப்பிடிப்பதன் ஆதாரத்திலும் தர்மம் இருக்க வேண்டும். இல்லாவிடில் அது சித்தியாகாது.
எப்போதும் எவரையும் துன்புறுத்தலாகாது. நல்லெண்ணத்துடனோ, கெட்ட எண்ணத்துடனோ ஒரு பிராணியையும் வதை செய்யக்கூடாது.