ADDED : ஜூன் 03, 2012 09:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
* மனிதனுக்கு வயது ஆக ஆக அவனிடத்தில் இருவிஷயங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.பொருளின் மீது பேராசை, வயதின் மீது பேராசை.
* செல்வவளம் என்பது அதிக செல்வத்தைப் பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமாகும்.
* இருவிஷயங்கள் ஒருவனிடமிருந்தால் அவனை நன்றி உள்ளவன் என்றும், பொறுமை மிக்கவன் என்றும் இறைவன் குறித்துக் கொள்வான்.
* உலக வசதிகளைப் பொறுத்தவரையில் தன்னை விடக் கீழானவரைப் பார்த்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
* இருப்பதைக் கொண்டு திருப்தி கொள். அதுவே என்றும் அழியாத செல்வமாகும்.
* இறைவன் உங்களில் சிலருக்கு சிலரை விட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள்.
(வேதவரிகளும் தூதர்மொழிகளும் நூலில் இருந்து)