ADDED : ஜூலை 31, 2014 05:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தர்மம் வகுத்த வழியில் பணம் சம்பாதியுங்கள். வேதம் விதித்த வழியில் வாழ்க்கை நடத்துங்கள்.
* உயிருடன் இருக்கும் வரை உடன் பிறந்த குணம் ஒரு மனிதனை விட்டு அகலுவது இல்லை.
* தர்மத்தின் மீது சிறிதும் சந்தேகம் கொள்வது கூடாது. அதுவே ஒரு மனிதன் கல்வி கற்றதன் அடையாளம்.
* புலன்களின் கவர்ச்சி அறிஞர்களைக் கூடத் தடுமாறச் செய்து விடும்.
* கோபத்தை கைவிட்டவன் வாழ்வில் துன்பம் குறுக்கிடாது. அவன் அமைதியுடன் வாழ்வான்.
- வியாசர்