ADDED : மே 02, 2023 03:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதன் நீண்ட ஆயுளையும், நிறைவான வளமும் பெற்று வாழ விரும்பினால், உறவுகளை அரவணைக்க வேண்டும். இவர்களே ஒருவரது வாழ்க்கையை தாங்கி நிற்கும் வேர்களாகவும், ஆதாரமாகவும் விளங்குகிறார்கள்.
மதீனாவுக்கு சென்ற நபிகள் நாயகம், நிகழ்த்திய முதல் சொற்பொழிவில் இதைப்பற்றி கூறியுள்ளார்.
* மக்களே! அமைதியை பரப்புங்கள்.
* பசித்தவருக்கு உணவு கொடுங்கள்.
* உறவுகளை இணைத்துக் கொள்ளுங்கள்.
* மக்கள் உறங்கும் வேளையில் இறைவனை வணங்குங்கள். சுவனம் புகுவீர்கள்.