நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆசிரியர் பஷீர் மதிய உணவிற்குப் பின் சிறிது நேரம் துாங்கும் வழக்கம் கொண்டவர். மாணவர்களை எழுதச் சொல்லி விட்டு துாங்குவார். ஒருநாள் சந்தேகம் கேட்டு ஆசிரியரை எழுப்பினான் மாணவன் தாவூத்.
கோபப்படுவது போல், '' பாடம் நடத்துவது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். இப்படி செய்துவிட்டாயே'' என்றார். மறைந்திருந்து இதைக் கேட்ட தலைமையாசிரியர், அந்த வகுப்பு மாணவர்களிடம் அந்த ஆசிரியருக்குத் தெரியாமல் சில விஷயங்களை கூறினார். மறுநாள் காலையில் ஆசிரியர் போர்டில் எழுதிக் கொண்டிருக்கும் போது மாணவர்கள் அனைவரும் துாங்கினர்.
''பசங்களா... பாடம் நடத்தும் போது துாங்குகிறீர்களே...' என கோபமாக கேட்டார். சாமர்த்திசாலியான ஒருவன், ''நாங்களும் உங்களைப் போல் பாடங்களை பற்றி சிந்திக்கிறோம்'' என்றான். அவரது முகத்தில் ஈயாடவில்லை.