ADDED : அக் 25, 2024 08:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூபி ஞானி ஒருவரை சந்திக்க பலதரப்பட்ட மக்களும் வந்தனர்.
''ஐயா! நான் நீண்ட நாளாக வயிற்று வலியால் அவதிப்படுகிறேன். என் நோயை குணப்படுத்த முடியுமா'' எனக்கேட்டார் ஒருவர்.
''ஐயா! இந்த ஊரில் நான்தான் பணக்காரன். ஆனால் அடுத்த ஊரில் என்னை விட பணக்காரர் ஒருவர் இருக்கிறார். அவரை நான் முந்த வேண்டும். அதற்கு வழி சொல்லுங்கள்'' என மற்றொருவர் கேட்டார்.
இப்படி தங்களின் குறைகளை முறையிட்டனர். உடனே அவர், 'இந்த நிலை ஒருநாள் மாறும்' என உபதேசம் செய்ததோடு நோயாளியிடம், 'நான் விரைவில் குணம் அடைவேன்' என்றும், பணக்காரரிடம், 'நான் இருக்கும் நிலையே நல்லது' என்றும் அடிக்கடி மனதிற்குள் சொல்லச் சொன்னார். இது எல்லோருக்கும் பொருந்தும்.