
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகத்திடம் வந்த ஒருவர், ''அதிகாலை (ஸுப்ஹு) தொழுகையை நீட்டி தொழ வைக்கிறார் ஒரு இமாம். இதனால் அதிகாலையில் நடக்கும் கூட்டுத் தொழுகையில் தாமதித்தே கலந்து கொள்கிறேன்'' என்றார்.
அதற்கு நாயகம், ''மக்களே! உங்களை சிலர் வழிபாட்டில் வெறுப்பு கொள்ளும்படிச் செய்கிறார்கள். எனவே எளிமையான முறையில் தொழவையுங்கள். அதாவது சூழ்நிலையைப் அனுசரித்தும், தொழக்கூடியவர் எத்தகையவர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் பின் வரிசையில் நின்று தொழுபவர்களில் நோயுற்றவர்கள், முதியவர்கள் இருக்கக்கூடும். ஆனால் தனித்து நின்றால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொழுது கொள்ளுங்கள்'' என்றார்.