சிலர் பசுத்தோல் போர்த்திய புலியாக மற்றவரிடம், 'நல்லவனாய் இரு. நாலு பேருக்கு நன்மை செய், தர்மம் செய், பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே' என்பார்கள். ஏமாற்று அரசியல்வாதிகள் சிலர் நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என மேடைகளில் முழங்கி விட்டு, மக்களின் பணத்தை சூறையாடி கொண்டிருப்பர். மறுமை நாளில் அவர்களின் நிலை என்னாகும் என குர்ஆன் கூறுகிறது.
இறுதித் தீர்ப்பு நாளில் தீயவர்கள் நரக நெருப்பில் துாக்கி எறியப்படுவார்கள். அவர்களின் குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும். அக்குடலை கையில் எடுத்துக் கொண்டு, செக்கில் சுற்றுவதைப் போல நரகத்தைச் சுற்றுவார்கள். இதைப் பார்ப்பவர்கள், 'ஏன் இந்த நிலை ஏற்பட்டது? நன்மை செய்யுங்கள் என பிறருக்கு உபதேசம் செய்தாயே... உனக்கு ஏன் இந்த அவல நிலை' எனக் கேட்பார்கள்.
'பிறருக்கு உபதேசம் செய்தேனே தவிர, அதை ஒருநாளும் பின்பற்றவில்லை'' என்பார்கள். உபதேசிப்பதை விட தன்னை திருத்திக் கொள்பவனே புத்திசாலி.