நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸெய்யதுனா தாவூத் என்பவர் ஒரு வியாபாரி. தினமும் கிடைக்கும் லாபத்தை மனைவியிடம் கொடுப்பார். ஆனால் ஒருநாள் எந்த பொருளும் விற்பனையாகவில்லை. மனைவி கேட்டதற்கு, ''நாளை கண்டிப்பாக லாபத்தோடு வருவேன்'' என்றார் தாவூத். மறுநாளும் இதே நிலையே நீடித்தது.
வருந்திய தாவூத் சோகமுடன் வீட்டுக்குச் சென்றார். அவரைக் கண்ட மனைவி, ''நீங்கள் தவறு செய்து விட்டீர்கள். அதனால்தான் இந்நிலை ஏற்பட்டது'' என்றாள்.
''என்ன செய்தேன்''
''எல்லாம் என்னால் தான் நடக்கிறது என எண்ணி விட்டீர்கள். இன்ஷா அல்லாஹ் (இறைவன் விரும்பினால்) எனச் சொல்லவில்லை. எனவே விற்பனை இல்லை. அவன் நினைத்தால் லாபம் கிடைக்கும்'' என்றாள்.