நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எப்போதும் சாக்லெட் சாப்பிட்டுக் கொண்டிருப்பது சிறுவன் ஜாபரின் வழக்கம். பல முறை சொல்லியும் கேட்காததால் அவன் ஆசிரியரிடம் முறையிட்டாள் அவனது தாய். அதற்கு மூன்று நாள் கழித்து வா எனச் சொன்னார் அவர்.
மூன்றாம் நாளன்று, ''தம்பி. இனிப்பை அதிகம் சாப்பிடாதே; அது உடலுக்கு நல்லதல்ல'' என அறிவுறுத்தினார். ''இதை நீங்கள் அன்றே சொல்லியிருக்கலாமே... என்னை ஏன் அலைய வைத்தீர்கள்'' எனக் கேட்டாள்.
''கேட்பது சரிதான் அம்மா. நானும் இனிப்பு அதிகம் சாப்பிடுவேன். என்னை சோதித்துக் கொள்ள மூன்று நாள் அவகாசம் கேட்டேன். நானும் இனிப்பு சாப்பிடாமல் இருந்ததால் அறிவுரை சொல்ல தகுதி பெற்றேன்'' என்றார் ஆசிரியர்.