நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெக்காவைச் சேர்ந்த காபிர்களுடன் (இறை நிராகரிப்பாளர்) நடந்த போரில் கைதியாக அகப்பட்டார் தோழர் ஹுபைப். அவரைக் கொலை செய்ய நாள் குறிக்கப்பட்டது. அந்நாளில் ' நம் எதிரி ஒருவன் சாகப் போகிறான்' என்ற மகிழ்ச்சியில் காபிர் சிறுவர்களும், பெண்களும் அவரைக் காண குவிந்தனர். மரணத் தருவாயில், ''இரண்டு ரக்அத்துக்கள் தொழ எனக்கு அனுமதி தருவீர்களா'' எனக் கேட்க காபிர்கள் அனுமதித்தனர். தொழுகை செய்து முடித்ததும், 'நான் இருக்கும் இடத்தில் நபிகள் நாயகம் இருந்தால் மகிழ்வேன்' என நீ சொல்வாயானால் குடும்பத்தாருடன் உன்னை வாழச் செய்வோம்'' என காபிர்கள் தெரிவித்தனர்.
அதற்கு அவர், '' நாயகத்தின் காலில் ஒரு முள் குத்தினாலும் என் மனசு தாங்காது'' என்றார். அடுத்த நிமிடமே கழுமரத்தில் ஏற்றப்பட்டார். கூரிய அம்புகளால் அவரது உடல் துளைக்கப்பட்டு சல்லடையானது.