ADDED : மார் 07, 2025 08:56 AM

அ நிறம் | அளவு
மனஉறுதி மிக்க நபிகள் நாயகத்தை கொல்ல குரைஷி என்னும் இனத்தவர் முடிவு செய்தனர்.
இதற்காக அவரது பெரிய தந்தை அபூதாலிப் வீட்டிற்கு சென்ற குரைஷி தலைவர்கள், ''நாயகத்தை கண்டித்து வையுங்கள். அவர் தன் பிரசாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். விரும்பினால் அவரை இந்நாட்டின் மன்னர் ஆக்குகிறோம். பெண் வேண்டுமானால் ஒரு பேரழகியைத் திருமணம் செய்து வைக்கிறோம். இல்லையென்றால் பணக்காரர்களில் ஒருவர் ஆக்குகிறோம்.
ஆனால் எங்களை மீறி பிரசாரம் செய்தால் உயிரை எடுத்து விடுவோம்'' என மிரட்டினர். மிரட்டலுக்கும் பணியாமல் தொடர்ந்து பணியாற்றினார்.
