
ஹஜ்ரத் நுாஹ் (அலை) ஒருநாள் காட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை சந்தித்த வானவரான ஹஜ்ரத் இஜ்ராயீல், ''உங்கள் ஆயுள் முடிந்து விட்டது. உங்களுடைய உயிரை கைப்பற்ற வந்துள்ளேன்'' என தெரிவித்தார்.
உடனே நுாஹ், ''சற்று அவகாசம் வேண்டும். மனைவி, குழந்தைகளிடம் விடை பெற்று வருகிறேன்'' என்றார்.
''இது வழக்கத்திற்கு விரோதமான செயல்; எந்த நேரத்திலும் மரணம் வரும்''
''இந்த நடுக்காட்டில் என் உயிர் பிரிந்தால் என்னைக் குளிப்பாட்டவும், ஜனாஸா தொழுகை நடத்தவும் இங்கு யார் இருக்கிறார்கள்'' எனக் கேட்டார்.
''அதற்குரிய ஏற்பாட்டுடன்தான் வந்துள்ளேன். என்னோடு வானவர் சிலர் வந்துள்ளனர்'' என்றார்.
''அப்படியானால் உங்களுடைய கடமையை நிறைவேற்றிக் கொள்ளலாம்'' என்றார் நுாஹ்.
இஜ்ராயீல் உயிரை பறித்துக் கொண்டதும் வானவர்கள் நுாஹ்ஹின் உடலை குளிப்பாட்டி ஜனாஸா தொழுகையும் நடத்தினர். அப்போது வானவர்கள் அனைவரும் அழுதனர்.