நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முஆவியா என்பவர் மகன் மீது கோபம் கொண்டிருந்தார். இதையறிந்த அஹ்னப் என்பவர் அவரை வீட்டில் சந்தித்து, ''குழந்தைகள் நம் உள்ளத்தின் கனிகள். நம் மடியின் மீது சாயும் உரிமை கொண்டவர்கள். அவர்களிடம் பூமியைப் போல பொறுமையுடன் நடக்க வேண்டும். அன்பால் அரவணைக்க வேண்டும்.
வருங்காலத்தில் அவர்களின் மூலம் நாம் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு உதவி செய்யுங்கள். சோர்வாக இருந்தால் உற்சாகப்படுத்துங்கள்'' என அறிவுறுத்தினார். இதைக் கேட்டு மனம் தெளிந்தார் முஆவியா. இனிமேல் கோபப்பட மாட்டேன் என உறுதி அளித்தார்.