நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகமும், அவரது நண்பர்களும் ஒருமுறை வெளியூர் பயணம் செய்தனர். பொழுது சாயும் நேரத்தில் கூடாரம் அமைத்து ஓரிடத்தில் தங்கினர். அன்றிரவு உணவுக்காக ஒரு ஆட்டை அறுத்து சமைக்க முடிவு செய்தனர்.
நண்பர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு வேலையாக பகிர்ந்து கொண்டனர். ஆனால் நாயகத்திற்கு எந்த பணியும் கொடுக்கவில்லை. ''நீங்கள் மட்டும் வேலையைப் பகிர்ந்து செய்கிறீர்களே... எனக்கும் ஏதாவது வேலை கொடுங்கள்'' என்றார்.
''நீங்கள் ஓய்வெடுங்கள். நாங்கள் செய்கிறோம்'' என்றனர்.
''எல்லா வேலைகளையும் நீங்களே செய்து முடிப்பீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் அது முறையல்ல. மனிதன் தனக்குரிய உணவை தானே தேடி உண்பது நல்லது. இல்லாவிட்டால் அதற்குரிய பங்களிப்பை செய்து முடித்த பின்னரே உண்ண வேண்டும். அப்போது தான் இறைவன் நம்மை நேசிப்பான்'' எனச் சொல்லி விறகு சேகரிக்க புறப்பட்டார்.