
நண்பரின் அழைப்பை ஏற்று அவரின் வீட்டுக்குச் சென்றார் நாயகம். சாப்பிட்டு முடித்து வெளியே புறப்பட்ட போது, ''எங்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்'' எனக் கேட்டார் அந்த நண்பர்.
''இறைவனே... இவர்களுக்கு என்ன கொடுத்தாயோ அதிலேயே பரக்கத் செய்வாயாக. அறியாமல் செய்த தவறுகளை மன்னிப்பாயாக'' என வேண்டினார்.
பரக்கத் என்பதற்கு வளர்ச்சி, நிம்மதி என பொருள் உண்டு. எடுத்துக்காட்டாக,
உணவில் பரக்கத்: சத்தான உணவை குறைவாக சாப்பிடுதல்.
ஆயுளில் பரக்கத் : உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழுதல்.
கல்வியில் பரக்கத் : நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெறுதல்.
பணத்தில் பரக்கத் : பணம் குறைவாக இருந்தாலும் நிறைவாக வாழுதல்.
இதனால்தான், 'அவருக்கு எதைத் தந்தாயோ அதிலேயே பரக்கத்தைத் தருவாயாக' என்றார். ஒருவேளை 'அதிகம் பொருள் கொடுப்பாயாக' என வேண்டினால் அதுவும் பேராசையே. எனவே இருப்பதில் நிறைவுடன் வாழ்வதே வாழ்க்கை.

