நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகத்தை சந்திக்க வந்த ஒருவர், தனக்கு திருமணம் நடக்க போவதாக சொன்னார்.
''பெண் பார்த்து விட்டீரா'' எனக் கேட்டார்.
''இல்லை. இனி மேல் தான் பார்க்க வேண்டும்'' என்றார் அந்த நபர்.
''முதலில் பெண்ணைப் பாருங்கள். அவளுக்கு உங்களைத் திருமணம் செய்ய சம்மதம் தானா...' எனக் கேளுங்கள். அப்போது தான் இருவருக்கும் புரிதல் ஏற்படும். நாளடைவில் அது அன்பாக மலரும்'' என்றார்.
இரு மனம் இணையும் நிகழ்வே திருமணம். அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமபங்கு இருக்கிறது.

