ADDED : அக் 08, 2026 02:02 PM

அ நிறம் | அளவு
நபிகள் நாயகத்தை பார்க்க இளைஞர் ஒருவர் வந்தார். அவரிடம் இருந்த போர்வையில் இரண்டு குஞ்சுகளுடன் புறா ஒன்று இருந்தது. குஞ்சுகளை பாதுகாக்க இறகுகளை விரித்து அணைத்தபடி நின்றது புறா.
''நாயகமே... உங்களுக்காகவே கொண்டு வந்தேன். காட்டில் செல்லும் போது புதர் ஒன்றில் இந்த புறா நின்றிருந்தது. வெள்ளை நிறத்தில் கொள்ளை அழகாக இருந்ததால் பரிசளிக்க வந்தேன்'' என்றார்.
இதைக் கேட்ட நாயகம் கண் கலங்கினார்.
''எதற்கு இப்படி செய்தாய். குஞ்சுகளுக்கு ஏற்பட்ட ஆபத்தை தடுக்க முடியாமல் தாய்ப்புறா வலிய வந்து உன்னிடம் சிக்கி விட்டது. உடனடியாக இதை எடுத்த இடத்திலேயே விட்டுவிடு'' என அறிவுறுத்தினார்.
உயிர்களின் மீது இரக்கம் காட்டுங்கள்.
