ADDED : மார் 22, 2024 09:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஞானி ஒருவருக்கு நன்கொடையாக பொற்காசுகள் கொடுத்தார் பணக்காரர் ஒருவர்.
அதற்கு ஞானி, ''இவ்வளவு தான் உள்ளதா''எனக் கேட்டார்.
''இல்லை. என்னிடம் நிறைய இருக்கிறது'' என்றார் பணக்காரர்.
''இந்த பொற்காசுகளும் உனக்கு தேவையானது தானே...'' எனக் கேட்டார்.
''ஆம். இது என்னிடம் இருந்தால் பயன்படுத்திக் கொள்வேன்'' என்றார் பணக்காரர் வேகமாக.
''எந்த பொருளும் அது தேவைப்படும் இடத்தில் இருப்பது நல்லது. அதனால் இது உன்னிடம் இருக்கட்டும்'' என திருப்பிக் கொடுத்தார் ஞானி.