நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதர்கள் போட்டிபோட்டுக் கொண்டு முன்னேறுவதை குறிக்கோளாக கொண்டுள்ளனர். அதிலும் சிலர் பணம், செல்வாக்கு, கவுரவம் என்ற பெயரில் செய்யும் அட்டூழியம் சொல்லிமாளாது. உண்மையில் இதற்கு எல்லாம் மதிப்பே இல்லை.
உதாரணமாக மழை பொழிகிறது. பயிர்கள் செழிப்பாக வளர்கிறது. இதைப்பார்த்த விவசாயி மகிழ்ச்சி அடைவார். பின் வறட்சி வரும். இப்படி நிலையற்ற தன்மை கொண்டது உலக வாழ்க்கை. ஆனால் மறுமைநாளில் இறைவனின் மன்னிப்பும் திருப்தியும் உள்ளன. எனவே அவனை நோக்கியும், விசாலமான சுவனத்தை நோக்கியும் ஓடுங்கள். இதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போடுங்கள்.