நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொறுப்பில்லாமல் இருந்த மகனைத் திருத்த நினைத்தார் தந்தை.
அவனிடம் ''இன்று வீதியில் யார் யார் எல்லாம் செல்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு வா'' எனச் சொன்னார்.
மாலையில் வந்த அவன் '' மக்கள் கூட்டம், கால்நடைகள் என வருவதும் போவதுமாக இருப்பதைப் பார்த்தேன்''என்றான்.
வேறு என்ன பார்த்தாய் எனக்கேட்டார். யோசித்த அவன், காலையிலும் மாலையிலும் மூட்டைகளை சுமந்து செல்லும் கழுதையை பார்த்தேன் என்றான்.
அதற்கு அவரோ ''காலையில் ஆற்றிற்கு செல்லும் போது அழுக்குமூட்டைகளையும், மாலையில் வரும் போது வெளுத்த மூட்டைகளையும் சுமந்து வரும் கழுதைக்கு என்ன துணிகள் எனத்தெரியாது. அதுபோல இன்ப துன்பங்களை சமமாக கருது. பொறுப்பு தானாக வரும்'' என்றார் தந்தை. தலையசைத்தான் மகன்.

