ADDED : ஏப் 29, 2018 08:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம் எவ்வளவு அவசியம் என்பதை நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் வழியாக அறியலாம்.
நாயகத்திடம், தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொன்னார் ஒருவர்.
''மணப்பெண்ணை பார்த்து விட்டாயா?” என்று கேட்டார் நாயகம்.
அவர் ''இல்லை'' என்றார்.
''முதலில் பெண்ணைப் பார். பின் அவளுடைய சம்மதத்தை தெரிந்து கொள். அப்போது தான் உங்களிடையே அன்பு ஏற்படும்,'' என்றார் நாயகம்.
மற்றொரு சமயத்தில் ஒரு பெண் நாயகத்திடம், ''கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணை ஒருவருக்கு திருமணம் செய்விக்க மார்க்கத்தில் அனுமதியுண்டா?'' என்று கேட்டாள்.
''உனக்கு பிரியமில்லாதவரை நீ திருமணம் செய்யாதே,'' என பதிலளித்தார்.
'கன்னியாகவோ, விதவையாகவோ எப்படி இருந்தாலும் ஒரு பெண்ணுடைய அனுமதி இல்லாமல் அவருக்கு திருமணம் செய்து வைக்க கூடாது' என்கிறார் நாயகம்.