ADDED : ஜூன் 21, 2022 11:58 AM

முல்லா சென்று கொண்டிருந்த வீதியில் உள்ள ஒரு குடிசைக்குள் சத்தம் கேட்க உள்ளே சென்றார். முல்லாவிற்கு அவர்களைப்பற்றி நன்கு தெரியும். அங்கிருந்த தாயும்,மகனும் ஏதோ ஒன்று பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.
முல்லாவைப் பார்த்து இவனைப் பாருங்கள். பள்ளிக்கூடம் போகாமல் அடம் பிடிக்கிறான், நான் அறிவுரை சொல்லியும் கேட்கவில்லை என்றாள் தாய். முல்லா அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணியைக் கிழித்தார். இருவரும் திகைத்தனர். ''துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டாரே?” என்று கேட்டான் பையன்.
பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்வையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயர்ந்த துணி பாழானது பெரிய விஷயமா” என்றார்
முல்லா. இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கியது. படிப்பின் தன்மையை உணர்ந்த பையன் உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான். அவன் சென்ற பிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையை அவனது தாயிடம் கொடுத்து விட்டுப் சென்றார்.

