
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு வீட்டுத்திண்ணையில் சில இளைஞர்கள் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர் அவ்வழியே வந்த நாயகத்திடம் சிலர், ' தொழுவது மட்டும் தான் நற்செயலா' எனக் கேட்டனர்.
அதற்கு அவர் அது நற்செயல் தான். மேலும், இனிய சொற்களை ஒருவருக்கொருவர் பேசுவதும், உறவினர்களை இன்முகத்துடன் வரவேற்பதும், செல்லும் பாதையில் முகம் தெரியாதவர்களுக்கும் உதவிகளை செய்வதும், தோழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதும், எப்போதும் இறைவனை நினைத்திருப்பதும் நற்செயலே என நாயகம் விளக்கினார்.

