
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தினமும் அவசர, அவசரமாக தொழுது விட்டு வெளியேறினார் தோழர்.
இதைக் கவனித்த நாயகம் அவரிடம், ஏன் தினமும் சீக்கிரமாக வெளியேறுகிறீர் எனக்கேட்டார்.
அதற்கு அவர், பக்கத்து வீட்டில் உள்ள மரத்திலிருந்து பேரீச்சம்பழம் என் வீட்டு வாசலில் விழுகிறது. அதனை எனது குழந்தைகள் சாப்பிட்டு விடுகிறார்கள். அதைத் தடுக்கவே சீக்கிரம் செல்கிறேன் என்றார்.
நாயகம் அவரின் நற்செயலை பாராட்டினார். பக்கத்துவீட்டு உரிமையாளரிடம் பேசி விழும் பழங்களை தோழருக்கே கொடுக்கும் படி செய்தார். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதவர்களுக்கு நல்லதே நடக்கும் இனி தினமும் தொழுகையை விட்டு அவசரமாக வெளியேறாதீர்கள் என்றார் நாயகம்.

