ADDED : டிச 11, 2022 08:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேச்சாளர் ஒருவர் ''உங்களது பெயர் எழுதிய பலுான்கள் அந்த சிறிய அறையில் உள்ளது. அவரவருக்குரிய பலுானை ஐந்து நிமிடத்திற்குள் எடுத்து வாருங்கள்'' என அங்குள்ளவர்களைப் பார்த்துச் சொன்னார். அனைவரும் அவ்வாறே செய்ய சிரமப்பட்டார்கள். மறுபடியும், கையில் கிடைத்த பலுானை எடுத்து வாருங்கள் என அவர்களிடம் பேச்சாளர் சொன்னார். அனைவரும் சிரமம் இல்லாமல் எடுத்து வந்து, உரியவரிடம் பலுானை கொடுத்து மகிழ்ந்தனர். இது தான் வாழ்க்கை. எல்லோரும் மகிழ்ச்சியை எங்கோ தேடுகிறோம் அது நம்மிடமே இருக்கிறது. உண்மையான மகிழ்ச்சி என்பது பிறருக்கு உதவுவதே என்றார். அனைவரும் மனநிறைவோடு கைதட்டினர்.

