ADDED : செப் 04, 2022 01:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிற்றுண்டிக்கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் முல்லா. அங்கு வந்த முரடன் ஒருவன் அவரின் தலைப்பாகையை தட்டி விட்டு கோபம் மூட்டினான். மறுநாளும் முரடன் அவ்வாறே செய்ய அதனைப் பார்த்தவர்கள் மன்னரிடம் முறையிடுங்கள் என்றனர்.
மறுநாள் வீதியில் அரண்மனைக்காவலர் செல்வதை பார்த்தார் முல்லா. இருவரும் இளம் வயது நண்பர்கள். அவரை அடையாளம் கண்டு கொண்டு அன்புடன் பேசி சாப்பிட அழைத்தார். தான் அமர்ந்திருக்கும் இடத்தில் காவலரை அமர வைத்து சாப்பிடச் செய்தார். அங்கு வந்த முரடன், முல்லா என நினைத்து காவலரின் தலைப்பாகையை தட்டி விட்டான். பிறகு என்ன! சிறைக்கு சென்றான் முரடன்.

