நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகத்தின் சிறிய தந்தையும் மாவீரருமான ஹம்ஸா வேட்டையாடுவதில் விருப்பமானவர். இஸ்லாத்தை வெறுக்கும் குரைஷி மக்களிடம் மதிப்பை பெற்றவர். இவர் இஸ்லாத்தை தழுவவில்லை என்றாலும், நாயகத்திடம் அன்பு கொண்டிருந்தார். குரைஷித் மக்களில் ஒருவர் நாயகத்தை கல்லால் அடித்தார். அந்தச் செயலை ஹம்ஸா அறிந்தார். உடனடியாக அங்கு சென்று அவரது தலையை உடைத்தார். பின் நாயகத்திடம் வந்தார், “முஹம்மதே கவலைப்படாதீர். உம்மை தாக்கியவரைப்பழி வாங்கிவிட்டேன். அந்த மூடரின் தலையை உடைத்து விட்டேன்'' என்றார். அதற்கு, 'நீங்கள் செய்தது தவறு. இஸ்லாத்திற்கு விரோதமாக இருப்பவர்களைப் பழி வாங்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல' என்றார் நாயகம்.