
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகத்தை சந்திக்க வந்த ஒருவர், ''என்னிடம் சொத்து இல்லை. வாழ்க்கை நடத்த சிரமமாக உள்ளது. இந்த நிலை என் மகனுக்கு வரக்கூடாது என நினைக்கிறேன். சேமிக்க விரும்புகிறேன். இது சாத்தியமா'' என முறையிட்டார்.
அதற்கு, ''மகன் பொறுப்பாக இருப்பானா?'' என நாயகம் கேட்டார்.
''நன்றாக படிப்பான். அதோடு ஒழுக்கமாகவும் இருப்பான்'' என்றார்.
''கவலைப்பட வேண்டாம். செல்வத்தை விட ஒழுக்கமே சிறந்தது. அது அவனை காப்பாற்றும்'' என நம்பிக்கை தந்தார்.
பார்த்தீர்களா... ஒழுக்கமாக இருந்தால் செல்வம் தேடிவரும்.

