
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உறவினர் ஒருவர் மருத்துவமனையில் உள்ளார் என தகவல் கிடைத்தால் சிலர் குடும்பத்தினரிடம் நலம் விசாரிப்பர். அங்கு அவர்களின் நிலைமை புரியாமல் மனதில் பட்டதையெல்லாம் பேசுவார்கள். 'இப்படித்தான் பக்கத்து வீட்டில் வேலை பார்க்கும் போது கொத்தனார் ஒருவருக்கு கால் உடைந்தது. இன்னும் சரியாகவே இல்லை. அடுத்த தெருவில் வசிக்கும் வாத்தியாரின் மகளுக்கு பைத்தியம் பிடித்து இன்னும் தெளியவில்லை' என தேவையில்லாமல் பேசுவார்கள்.
மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரிக்க செல்பவர்கள் அக்கறை காட்டுகிறேன் என்ற முறையில் நலம் விசாரியுங்கள். நோயாளிகள் குணமாக வேண்டும் என்ற நினைப்புடன் அளவோடு பேசுங்கள்.

