ADDED : செப் 29, 2023 08:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவனுக்கு இறைவன் பொருள் வசதி அளித்திருக்கிறான். அவன் அதற்குரிய ஜகாத்தைக் கொடுக்கவில்லை எனில், அப்பொருளே மறுமைநாளில் கொடிய நச்சுத்தன்மை கொண்ட பாம்பாக மாறும். அதன் தலையில் இரு கரும்புள்ளிகள் காணப்படும். அது அவனுடைய கழுத்தில் வளையமாகச் சுற்றி, இரு தாடைகளையும் பிடித்து, 'நான்தான் உன்னுடைய பொருள் (செல்வக்களஞ்சியம்)' என்று கூறும்.
இதற்கு நபிகள் நாயகம் பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்.
''இறைவன் தனது அருளில் இருந்து தங்களுக்கு வழங்கியுள்ளான். இதை யார் கஞ்சத்தனம் செய்கிறார்களோ, அவர் இதனை நமக்கு நல்லது என எண்ணிட வேண்டாம். மாறாக இது அவர்களுக்கு மிகவும் கெட்டதாகும்.
கஞ்சத்தனத்தின் மூலம் சேமித்து வைத்தது மறுமைநாளில் அவர்களின் கழுத்தில் விலங்காகப் பூட்டப்படும். (அதாவது அது அவர்களின் பேரழிவுக்கு காரணமாகும்).