ADDED : ஏப் 09, 2023 01:25 PM

நபிகள் நாயகத்தை சந்திக்க வந்த ஒருவர், ''ஒரு பெண் தொழுகையில் ஈடுபாடு கொண்டவள். அதைப்போல நோன்பு நோற்பதிலும், தர்மம் செய்வதிலும் ஈடுபாடு உடையவள். ஆனால் அண்டை வீட்டாரிடம் கடினமாக பேசுகிறாள். அவளுடைய நிலை என்ன?'' எனக் கேட்டார்.
அதற்கு அவர், ''நரகத்திற்கு அவள் போக வேண்டும்'' என்றார்.
வந்தவரோ மற்றொரு பெண்ணைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
''அந்தப் பெண் தொழுகை, நோன்பு ஆகியவற்றில் அதிப்படியாக ஈடுபாடு உள்ளவள் அல்ல. ஆனால் தர்மம் செய்வாள். அண்டை வீட்டாருக்கு உதவியாக இருப்பாள். இவளின் நிலை என்ன?'' எனக்கேட்டார்.
அதற்கு நாயகம், ''அவள் சுவனத்திற்கு உரியவள் ஆவாள்'' என்றார்.
மேலே கூறியவை நல்ல ஒழுக்கத்திற்கு தரும் முக்கியத்துவத்தை சொல்கின்றன. தர்மம் செய்து வாழ்வது ஒருவகை வணக்கமாகும். அதற்காக தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்கள் தேவையில்லை என அர்த்தம் அல்ல.

